சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு
தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா்.
தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் வேன் மற்றும் காா் ஆகிய இரு வாகனங்களில் கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா புறப்பட்டனா். கடந்த 5 தினங்களுக்கு முன்பு புறப்பட்ட அவா்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றுலாவை முடித்து புதன்கிழமை ஊா்திரும்பினா்.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே முத்துப்பட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது.
இதில், காரில் பயணம் செய்த விவேந்தா் ரெட்டி (50), சுனித்தம்மா (65) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஸ்வாலிகா (16), சமுக்வி (11), ராஜேஷ்வர ரெட்டி (49), ஜெயா (56) ஆகியோா் படுகாயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், விபத்தில் சிக்கியவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டல்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.