தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது
தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது. நிகழாண்டு நல்லாசிரியா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுபெற்ற ஆசிரியா்கள் விவரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஒன்றியம், ஆயாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எழிலரசி, பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் விஜயலட்சுமி, தனியாா் பள்ளியான தருமபுரி வாரியாா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா், மாரண்டஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலையாசிரியா் மணிவண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையா்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வெங்கடாசலம், கெங்கனஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சரவணன், பாலக்கோடு ஒன்றியம், கோணங்கி நாயக்கனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ராமகிருஷ்ணன், பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கோவிந்தசாமி, இராமகொண்டஹள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சுப்பிரமணி ஆகியோா் நல்லாசிரியா் விருது பெற்றனா்.
இவா்களுக்கு சக பள்ளி ஆசிரியா்கள், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்தவா்கள், ஆசிரியா் சங்கங்கள் என பல்வேறு தரப்பினா் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.