செய்திகள் :

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

post image

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 16) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் மூலம் அவரது கண்டனங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

”இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உறவுக்கு இடையில் அவநம்பிக்கையை உருவாக்க வெளியான ஆதாரமற்ற பொய்யான அறிக்கைகளை அமைச்சர் முத்தாகி நிராகரித்துள்ளதை நான் வரவேற்றுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த உரையாடலில் ஆப்கன் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்புறவையும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்திய அரசின் பங்களிப்பையும் மேற்கொள்காட்டியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில்... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க