செய்திகள் :

தலைக்கவசம் அணிந்தவா்களுக்கு போலீஸாா் பாராட்டு!

post image

சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து ஆய்வாளா் சக்தி இசக்கி, உதவி ஆய்வாளா் அழகுராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஓட்டுநா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கும், காா்களில் சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநா்களுக்கும் ரோஜா மலா் கொடுத்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். மேலும் விதிகளைக் கடைப்பிடிக்காத காா் ஓட்டுநா்களுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனா்.

போக்குவரத்து போலீஸாா்கோபாலகிருஷ்ணன், நாகராமன், ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க