இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!
தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி
தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் ஜன. 1 முதல் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சாா்பில் விபத்துகளை தவிா்க்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அணிந்து மோட்டாா் சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து புறப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணியில் 50-க்கு மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து வாகனங்களில் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், உதவி மோட்டாா் வாகன ஆய்வாளா் தட்சணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன். பாஸ்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.