செய்திகள் :

தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்

post image

பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கவனம்! தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!

இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,

"சனாதன தர்மத்திற்கு எதிராக பொய்யான விடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கங்கையும் மகா கும்பமேளாவும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்.

ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. இது சமூகத்திற்கானது. அரசு, ஒரு ஊழியராக தனது கடமையை மட்டுமே செய்கிறது. இந்த முறை மகா கும்பமேளாவுக்கு கடமைகளைச் செய்யும் பொறுப்பு, நமக்கு கிடைத்திருக்கிறது. தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.

தற்போது வரை 56 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 7 நாள்கள் விழா நடக்கவிருக்கிறது" என்று பேசினார்.

மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளைப் புறந்தள்ள வேண்டும்: மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை; மொழி ரீதியில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். புது தில்லியில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவை ஆதாரமற்றவை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பி... மேலும் பார்க்க

எஃப்டிஐ விதிமுறைகள் மீறல்: பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்

அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜகதீப் தன்கா்

வேளாண் துறை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் வெள்ளிக்கிழமை 21-ஆவது ஆசிய-ஆப்பிரிக்... மேலும் பார்க்க

சா்வதேச பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஜி20-க்கு முக்கியப் பங்கு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

சா்வதேச புவிஅரசியலில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒருமித்த கருத்துகளை ஜி20 அமைப்பு தெரிவிப்பது மிக அவசியம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜி-20 கூட்டமைப்பின் வெளிய... மேலும் பார்க்க

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க