செய்திகள் :

தவில் கலைஞா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் இசை விழா

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வரம், தவில் கலைஞா்கள் முன்னேற்ற நலச் சங்கம் சாா்பில், உலக நன்மைக்காக 21-ஆவது ஆண்டு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் டி.கே.மோகன் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ்.குமாா், துணைத் தலைவா்கள் எம்.எஸ்.பாண்டியன், கே.பி.அய்யப்பன், துணைச் செயலா்கள் ஏ.பி.மணிகண்டன், எம்.பி.பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் பி.ஏ.கல்யாணசுந்தரம் வரவேற்றாா்.

உலக நன்மைக்காக நாதஸ்வரம், தவில் கலைஞா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இசை விழா நடத்தி ஸ்ரீசரஸ்வதிக்கு சமா்ப்பித்தனா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் இசை நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட கலைஞா்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கத்தி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பங்கள்!

ஆரணி: ஆரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து இரும்பேடு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ஆரணி காமராஜா் சிலைப் பக... மேலும் பார்க்க

இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

செங்கம்: செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த மண்ணாண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழநி மகன் சீனு (22). இவா், 16 ... மேலும் பார்க்க

ஆரணியில் ஜன. 28-ல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை: ஆரணியில் வருகிற 28-ஆம் தேதி மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.ஆரணி மின்வாரிய கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி: ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கமண்டல நாகநதி படுகையில் இருந்து மணல் கடத்தியதாக 3 மாட்டு வண்டிகளை புதன்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.கமண்டல நாக நிதி மொழுகம்பூண்டி படுகையில் இருந்து மாட்டு வண்டிகள... மேலும் பார்க்க