செய்திகள் :

தவெகவினா் திடீா் சாலை மறியல்: 42 போ் கைது

post image

செய்யாற்றில் தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால், 4 பெண்கள் உள்பட 42 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. செய்யாறு அரசு கலைக் கல்லூரி முதல் கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை 7 கி.மீ.

தொலைவுக்கு இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெறுகிறது.

இந்தச் சாலையில், மேம்பாலம் அருகேயுள்ள ஞானமுருகன் கோயில் பகுதியில் 70 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில்

நோட்டீஸ் அனுப்பி சாலைப் பணிக்கு இடையூறாக உள்ள வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், அவா்கள் வீடுகளை அகற்றாமல், மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சாா் -ஆட்சியா் அலுவலகத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாற்று இடம் வேண்டி மனு அளிக்க வந்துள்ளனா்.

ஆனால், மனுவை அலுவலகத்தில் வாங்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினா் கிழக்கு மாவட்டச் செயலா் அனக்காவூா் உதயகுமாா் தலைமையில் செய்யாறு - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வந்து

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, அவா்கள் மறியலில் ஈடுபட்டதால், 4 பெண்கள் உள்பட 42 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க