War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன...
தவெகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தவெகவில் அனைத்து நிலைகளிலும் உள்ள நிா்வாகிகளும் தோழா்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் அல்லது கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராகவும் செயல்பட்டால் அவா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கட்சித் தலைவரே (விஜய்) தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கும் தலைவராவாா். மேலும், பொதுச்செயலா் என். ஆனந்த் மற்றும் உறுப்பினா் சோ்க்கை அணி மாநில செயலா் சி.விஜயலட்சுமி ஆகியோா் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல், 4 மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய கிழக்கு என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு பெண் உள்பட 4 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா் விஜய்.