BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனையில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அப்போது நிர்வாகிகள் நியமன தாமதம் குறித்து பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்திடம் விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் விஜய் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!
இதைத்தொடர்ந்து விஜய் தனது அரசியல் தொடர்பான நகர்வுகளை வேகப்படுத்தியுள்ளார். அண்மையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்த விஜய் மூன்று பக்க கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். விஜய் தற்போது நடித்து வரும் கடைசி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.