TVK Vijay-க்கான 3 பெரிய சவால்கள்! | Madurai Maanadu | Spot Report
தவெக மாநாடு: பணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்!
மதுரை தவெக மாநாட்டுத் திடலில் அவசர மருத்துவ உதவிக்காக 100-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக அப்பகுதியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில 100-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடிப்படை மருத்துவ வசதிகளுடன் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.