தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாப்பரத்தியில் நாளை (ஆக.21) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
10 முதல் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல் மாநாட்டைப் போலவே இரண்டாவது மாநாட்டுக்காகவும், முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது அதை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 30 டன் எடையைத் தாங்கும் ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பம் நட முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது.
தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்து கடுமையாக சேதமானது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.