US: ``சீனாவைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் நட்பு வேண்டும்'' - ட்ரம்பை எச்சரித்த அ...
தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!
தவெக மாநாட்டுத் திடலில் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை மாநாட்டுத் திடலில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கில் தொண்டர்களால் கூடியுள்ளதால் மாநாட்டுத் திடல் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலும் அங்கு அதிகமாக இருப்பதால் 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்தனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசர மருத்துவ முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Volunteers faint due to crowding at tvk 2nd conference meeting at madurai
இதையும் படிக்க |இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு