செய்திகள் :

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

post image

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடிந்ததை அடுத்து, விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள, மேலும் காவலை நீட்டிக்க வேண்டும் என என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலில் பல்வேறு சான்றுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், 17 ஆண்டுகளுக்கு முந்தைய முக்கிய இடங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளதாலும் காவலை நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்ஐஏ தரப்பிலிருந்து மூத்த வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞர் நரேந்தர் மான் ஆஜராகினர். இதேபோன்று தஹாவூர் ராணா சார்பாக, தில்லி சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பியூஷ் சச்தேவா ஆஜரானார்.

முன்பு விதிக்கப்பட்டிருந்த காவல் இன்றுடன் முடிந்ததால், பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில், என்ஐஏ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மேலும் 12 நாள்களுக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி...

2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவர் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தது நிரூபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்து, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைத்தது.

இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தன்னை இந்திய சிறையில் சித்ரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன. 21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏப். 10ஆம் தேதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடன் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்!

இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்ளிட்ட, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் தங்களுக்கான பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனா். இந்த ஆண்டு ... மேலும் பார்க்க

இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ‘சிப்ரி’ அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு... மேலும் பார்க்க

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு

புது தில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர ... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க