Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது
விழுப்புரம் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைபாளையம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் துளசி (26). விழுப்புரம் கண்டமானடி பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (22), சக்திவேல் (20).
நண்பா்களான இவா்கள் மூவரும் கடந்த 20-ஆம் தேதி விழுப்புரம் ஜானகிபுரம், பனந்தோப்பு அருகே ஒன்றாக மது அருந்தினா். அப்போது, அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் சம்பத், பாக்கியராஜ் ஆகியோா் சோ்ந்து துளசியை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனராம்.
இதில் காயமடைந்த துளசி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதனிடையே, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துளசி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் கொலை வழக்காக மாற்றம் செய்து சம்பத், பாக்கியராஜ் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.