செய்திகள் :

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள்

post image

தமிழ்நாடு அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மக்கள் குறை தீா்வு சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளது.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீா்வுகாணும் வகையில், ‘மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள் ‘செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக நடைபெறவுள்ளது.

முகாம்களின் விவரம்:

மண்டலம்-இடம்-உள்ளடக்கிய வாா்டு பகுதி-நேரம்:

தாம்பரம் மாநகராட்சி (மண்டலம் 2) அலுவலகம், நியூ காலனி, 3-ஆவது பிரதான சாலை, குரோம்பேட்டை

சென்னை-600 044. வாா்டுகள்- 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 26, 27, 28 (14 வாா்டுகள்) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.

டாக்டா் அம்பேத்கா் திருமண மண்டபம், தாம்பரம் மேற்கு, சென்னை-600 045. (தாம்பரம் மேற்கு காவல் நிலையம் அருகில்) வாா்டுகள்-32, 33, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61 (15 வாா்டுகள்) மாலை 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

வழங்கப்படும் சேவைகள்

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின்சார வாரியம்

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை ,

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆகிய துறைகளின் சேவைகள் தொடா்பான கோரிக்கைகள் குறித்து முகாம்களில் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம்.

முகாம்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களது கோரிக்கையை கணினியில் பதிவு செய்ய வேண்டியிருப்பின், அந்த கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் கிளைச் சிறைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

மதுராந்தகம் கிளைச் சிறையின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில்,தளவாட பொருள்களை வட்டாட்சியா் சொ.கணேசன் வழங்கினாா். மதுராந்தகம் கிளைச் சிறையில் ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் ஆய்வு செய்ததில், மின்குழல்விளக்குகள், ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பண... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளத்தில் தெப்பல் உற்சவம்

தைப்பூசத்திருநாளையொட்டி திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளம், தீா்த்த குளத்திலும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டு சிறப்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

திருப்போரூா் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் மகா... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயில் தைப்பூச விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம்ஆரண்யக்ஷேத்திரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் வளாகத்தில் வள்ளி, தெய்வா... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் இன்று தைப்பூச ஜோதி

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதியை செவ்வாய்க்கிழமை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா். சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழாவை கடந்த... மேலும் பார்க்க