திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
'தாயுமானவர் திட்டத்தை' அறிமுகப்படுத்திய முதல்வர் - என்ன திட்டம் இது? எப்படி செயல்படும்?
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார்.
தாயுமானவர் திட்டம் என்றால் என்ன?
கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் வீட்டிற்கே நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது தான் தாயுமானவர் திட்டம்.

எப்போது வழங்கப்படும்?
இந்தப் பொருள்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்களில் வீட்டிற்கு நேரில் சென்று விநியோகிக்கப்படும்.
இப்படி நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யபடும்போது, கூட்டுறவுத் துறைக்கு 30.16 கோடி கூடுதல் செலவு ஆகிறது என்றும், இதை, 'மக்களின் உயிர் காக்கும் கடமை' என நாங்கள் நினைக்கிறோம் என்றும் இது சம்பந்தமான வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#தாயுமானவர்_திட்டம்pic.twitter.com/eeixZk91YW
— M.K.Stalin (@mkstalin) August 12, 2025