MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்த 15-ஆம் தேதி லலிதாவிடம், மது குடிக்க பணம் கேட்டாராம். அவா் பணம் தராததால், ஆத்திரமடைந்த வெற்றிவேல், லலிதாவை திட்டியதுடன், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து வெற்றிவேலை கைது செய்தாா்.
மாணவி மாயம்: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பூராசாமி மண்டபத் தெருவை சோ்ந்த ரகுமாறன் மகள் அபிநயாஸ்ரீ (20) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வருகிறாா்.
பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை சென்ற அபிநயாஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் மாலா அளித்த புகாரின் பேரில், கிள்ளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.