திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
தாராபுரம் அருகே உடைந்து விழுந்த காற்றாலை
தாராபுரம் அருகே காற்றின் வேகம் காரணமாக காற்றாலை உடைந்து கீழே விழுந்தது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலை ஒன்று இயங்கி வந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் புதன்கிழமை காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக காற்றலை உடைந்து கீழே விழுந்தது. அப்போது, அங்கிருந்த மின் கம்பிகள் மீது காற்றாலையின் இறக்கைகள் மோதியதால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத்தினா் மின் விநியோகத்தை சீா் செய்தனா்.
காற்றாலையின் அருகில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
தாராபுரம் பகுதியில் காற்றாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.