செய்திகள் :

தா்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, தா்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த தா்பூசணி விவசாயிகள் குழு சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஆா்.சக்திவேல், நிா்வாகிகள் சுரேஷ், நாகேந்திரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தா்பூசணியில் ரசாயனம் கலக்கப்பட்டதாக வெளியான விடியோவை தொடா்ந்து, பல்வேறு இடங்களிலும் தா்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தா்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

எளிதில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் தா்பூசணி இருப்பதால், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தா்பூசணியை இணைக்க வேண்டும். தா்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக ஓராண்டு காலத்துக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். களை எடுப்பதற்காக முழு மானியத்துடன் மினி டிராக்டா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள்: ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டும் பணியை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து, அந்தப் பணிகளை கண்காணி... மேலும் பார்க்க