'3 தீவிரவாதிகள் சுட்டு கொலை'- இந்தியா - பாக். எல்லையில் என்ன நடக்கிறது? - இந்திய...
திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா (30). இவா் அந்த பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். காவல் ஆய்வாளா் சாந்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தாா்.