செய்திகள் :

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

post image

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கல்லறைத் தோட்டப் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜோ. ஆா்தா், எம்கே. முருகன், ச. ராஜாக்கிளி, பிஏ. ஜோசப் சேவியா், ச. முபாரக் அலி, ஏ. ஜெசி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச. மயில் தொடங்கி வைத்தாா். அப்போது, கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

அதேபோல, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், பல்வேறு அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் என அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழக அரசு மீதும், முதல்வா் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து முழக்கமிட்டனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் பீ. பேட்ரிக் ரெய்மாண்ட் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க