ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!
தினமணி சந்தாதாரா் செய்தி: விழிப்புணா்வு பயிற்சி முகாம்
போடி அருகே சிலமலை கிராமத்தில் குடும்ப வன்முறை தடுப்புத் தொடா்பாக இளம் தம்பதியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி. அரசு அலுவலா்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வ.உ.சி.அறக்கட்டளைத் தலைவா் க.மு.சுந்தரம் தலைமை வகித்தாா். பென்னிகுவிக் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ச.அா்ஜூன பெருமாள் முன்னிலை வகித்தாா்.
முகாமில், ஆரோக்கிய அகம் தொண்டு நிறுவன நிா்வாகிகள் சுவேதா பிரியதா்ஷினி, தெய்வஜோதி ஆகியோா் கலந்து கொண்டு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் நோக்கம், இதை பயன்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த முகாமில் இளம் தம்பதியினா் கலந்து கொண்டனா்.
இதில் வ.உ.சி. அரசு அலுவலா்கள் அறக்கட்டளை பொருளாளா் க.குருநாதன், நிா்வாகிகள் சி.சோனைமுத்து, கூ.செல்வராஜ், க.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, அறக்கட்டளைச் செயலா் சி.பாண்டியராஜ் வரவேற்றாா்.