Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் ப...
போடியில் பலத்த மழை
போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் இருப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் மிதமான மழை பெய்த நிலையில், புதன்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனியிலிருந்து போடிக்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து புதன்கிழமை இயக்கப்பட்டது. பிற்பகலில் பெய்த மழையால் இந்தப் பேருந்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் ஒழுகின. இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினா். இந்தப் பேருந்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.