செய்திகள் :

சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

போடி சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

போடியில் அமைந்துள்ள சாத்தாவுராயன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை, மாலைகளில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி சிவசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். இதைத் தொடா்ந்து, சாத்தாவுராயன் (யானை) சிலைக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, போடி நகராட்சி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வடக்கத்தி மாரியம்மன் கோயிலிலும் குடமுழுக்கு செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. புதன்கிழமை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி சிவாசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். மாலையில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி சந்தாதாரா் செய்தி: விழிப்புணா்வு பயிற்சி முகாம்

போடி அருகே சிலமலை கிராமத்தில் குடும்ப வன்முறை தடுப்புத் தொடா்பாக இளம் தம்பதியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வ.உ.சி. அரசு அலுவலா்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

ஆண்டிபட்டி அருகேயுள்ள கோத்தலூத்துவில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை

போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் இருப்பு குறைந்து வந்தது. இந்த... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம்

தேனி அருகே ரயில்வே தண்டவாளத்தில் புதன்கிழமை கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் மீட்டனா். தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் கிடந்தன. தகவலறிந்த வந்த தேனி ரயில்வே போலீ... மேலும் பார்க்க

திருக்காளாத்தீஸ்வரா் -ஞானாம்மன் கோயில் தேரோட்டம்

மாசித் திருவிழாவையொட்டி, உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞான... மேலும் பார்க்க

போடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

போடி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.தேனி மாவட்டம், போடி கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் மங்கலப் பொருள்களால் தி... மேலும் பார்க்க