தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கைது
ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சில பரிசல் ஓட்டிகள் அரசின் கட்டணம் செலுத்தாமல் பாதுகாப்பு உடை இன்றி காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக கடந்த 17ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு, ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் பாதுகாப்பு உடை இன்றி ஆபத்தான பரிசல் பயணத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற ஊட்டமலை பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.