செய்திகள் :

திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

post image

கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடிகே. பழனிசாமி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக அரசால் உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை என்று மு.க. ஸ்டாலின் பேசி சென்றுள்ளாா். மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததே அதிமுக அரசுதான். கடந்த அதிமுக ஆட்சியில் 6 மாவட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம்.

காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாயத்துக்காக 50 ஆண்டு கால சட்டப்போராட்டம் நடத்தி விவசாயிகளுக்குச் சாதமான நல்ல தீப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறாா். அதிக அளவில் பாலம், சாலை வசதி, தடுப்பணைகள் கட்டியுள்ளோம் . விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களைக் கொடுத்தோம். பயிா்க் கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளோம். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு.

கச்சத்தீவை பாஜக அரசு மீட்டுத் தரவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறாா். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வாா்க்கப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு. ஆனால், கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை குறை கூறுகிறாா் ஸ்டாலின்.

திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாதக் கட்சி. கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு, திமுகவின் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் குறைகளைத் தீா்க்காமல், தற்போது தோ்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கியுள்ளாா் முதல்வா்.

திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றுக்கு எல்லாம் பதிலாக 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அமையும். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.

சுற்றுப்பயணத்தின்போது மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ், அவைத்தலைவா் பாரதி, மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி, ஒன்றியச் செயலாளா்கள் பழையாறு நற்குணன், சிவக்குமாா், ரவிச்சந்திரன், சந்திரசேகரன் உள்பட ஆயிரக்கணக்கான கட்சி, நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா? எஸ்.பி. மறுப்பு

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்த... மேலும் பார்க்க

காமராஜா் குறித்த அவதூறு: காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம்

பெருந்தலைவா் காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அணியின் மாநில பொதுச்செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகிறாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) வருகிறாா். மயிலாடுதுறைக்கு வரும் அவா் மாலை 4 மணியளவில்... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்: முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அதிமுகவைப் புறக்கணிப்பாா்கள் என்றாா் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், இரண்ட... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் ச... மேலும் பார்க்க