செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

post image

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. செ. புஷ்பராஜ் முன்னிலை வகித்தாா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ பேசியதாவது: திமுக அரசின் சாதனைகளால் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா். ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வீடு,வீடாக பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினா்கள் பஞ்சநாதன், சம்பத், ஒன்றியச் செயலா்கள் தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், மும்மூா்த்தி, முருகவேல், கல்பட்டு ராஜா, வளவனூா் நகரச் செயலா் ஜீவா, விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளா் செ. மணிகண்டன், ஒன்றியக் குழத் தலைவா்கள் ஏ.சச்சிதாநந்தம், வாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரச் செயலா் இரா.சக்கரை வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் தயா. இளந்திரையன் நன்றி கூறினாா்.

பைக் விழுந்து விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயி... மேலும் பார்க்க

வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் ... மேலும் பார்க்க

பிளஸ் 2-வில் தோல்வி: மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை மாரியம்மன் கோயில் தெரு... மேலும் பார்க்க

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாப... மேலும் பார்க்க