திமுக கொடிக் கம்பம் அகற்றம்!
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.
இதையொட்டி, ஆரணி திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனின் சொந்த ஊரான வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் நியாய விலைக் கடை அருகில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பத்தை அவரது முன்னிலையில் அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றி எடுத்துச் சென்றனா்.