செய்திகள் :

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

post image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ப்ட 1000 பேர் வரையில் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் செயல்திறனைப் பாராட்டியும், தமிழ்நாடு மீதான மத்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அவற்றில் சில முக்கியத் தீர்மானங்கள்

  • அம்பேத்கரை தரம்தாழ்த்தி, அவதூறாகப் பேசி, அவரின் தியாகத்தை இழிவுபடுத்தியதாக அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்

  • அமித் ஷாவை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாராட்டு

  • பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வலியுறுத்தல்; பெஞ்சல் புயலின்போது, சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்

  • மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலச் சட்டத்தை ஆதரித்ததாக அதிமுக, பாஜகவை கண்டித்து தீர்மானம்

இதையும் படிக்க:சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

  • தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு போதுமான நிதி வழங்காமல், மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாகக் கண்டனம்

  • சாத்தனூர் அணையை படிப்படியாக திறக்க உத்தரவிட்டு, உயிர்ச்சேதத்தை தவிர்த்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பாராட்டு

  • குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு; கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க தமிழக அரசு செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கு பாராட்டு

  • திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு

  • தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கக் கோரி தீர்மானம்

அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்

சேலம்: அம்பேத்கா் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.சேலத்தில் ஞாய... மேலும் பார்க்க

நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்: மு.க. ஸ்டாலின்

வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருந்ததைப்போன்று நூற்றாண்டிலும் திமுக ஆட்சியில் இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும... மேலும் பார்க்க

குடியரசு நாள் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு இடமில்லை!

புதுதில்லி: அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி, நெல்ல... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!

கெங்கவல்லியில் 25 வருடங்களுக்குப்பிறகு முன்னாள் மாணவ ஆசிரியர்கள், கற்பித்த விரிவுரையாளர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1997-1999ம் ஆம... மேலும் பார்க்க

திமுக வலிமையுடன் இருக்கிறது; 2026-ல் வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்

திமுக வலிமையுடன் இருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பார்க்க