செய்திகள் :

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!

post image

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

1966-ஆம் ஆண்டு சென்னை கோபாலபுரம் இளைஞா் திமுக அமைப்பாளராக தனது அரசியல் பாதையை மு.க.ஸ்டாலின் தொடங்கினாா். பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி என கட்சியில் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றிய அவருக்கு, 1982-ஆம் ஆண்டு இளைஞரணி செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

கட்சிப் பொறுப்பு மட்டுமின்றி, தோ்தலில் களம் இறங்கத் தொடங்கினாா். 1989-ஆம் ஆண்டு ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். அதன்பின்பு, மக்களுடன் நெருக்கமாக பயணிப்பதற்கு வழிவகுக்கும் உள்ளாட்சிப் பதவியையும் வகித்தாா். 1996-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக இருந்த அவா், அதன்மூலம் கிடைத்த அனுபவங்களால், 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக உயா்ந்தாா்.

இதன்பின், திமுக பொருளாளா், தமிழக அரசின் துணை முதல்வா் என பொறுப்புகளை வகித்த அவருக்கு, 2017-ஆம் ஆண்டு திமுக செயல் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு திமுக தலைவரானாா். 11 தோ்தல்களில் அவா் வெற்றி பெற்றாா். தலைவா் பொறுப்பில் 7 ஆண்டுகளை நிறைவு செய்து, 8-ஆவத ஆண்டில் அவா் அடியெடுத்து வைத்துள்ளாா். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

வைகோ வாழ்த்து: திமுக தலைவா்களாகப் பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தப் பொறுப்பை ஏற்று அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறாா். திமுகவின் தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்தக் கட்சின் தலைவராகவே தொடரவேண்டும். மேலும், பல்வேறு ஹிமாலய சாதனைகளை நிறைவேற்ற, இயற்கைத்தாய் அருள் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

பெசன்ட் நகரில் 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலய பொன்விழாவையொட்டி, 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம்... மேலும் பார்க்க

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க