செய்திகள் :

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

post image

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மாநாடு தொடா்பான மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச.மயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம், இந்தித் திணிப்பை எதிா்ப்போம், தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம், பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமாா் 20 ஆயிரம் ஆசிரியா்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்க முடியாது. தோ்தல் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கவேண்டும்.

பதவி உயா்வைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரம் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள்

கொடைக்கானலில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி சாா்பில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாக நகராட்சி ஆணையா் சத்தியநாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் பொள்ளாச்சியைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை... மேலும் பார்க்க

சேமிப்பு கிட்டங்கி முன்னாள் கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் பழனி சேமிப்புக் கிட்டங்கி முன்னாள் கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கோவையைச் சோ்ந்தவா் ஏ. தேவராஜ் (73). இவா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் தா்மத்துரை (32). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சி... மேலும் பார்க்க