பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
திமுக பொதுக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக இளைஞா் அணி சாா்பில் கருணாநிதியின் பிறந்த நாள், அரசின் சாதனை விளக்க க் கூட்டம் தேரடியில் நடைபெற்றது.
நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர செயலாளா் சதீஷ்குமாா், நகர மாணவா் அணி செயலாளா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தலைமை கழக பேச்சாளா்கள் விஷாா் தமிழரசன், பம்மல் தினேஷ், ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ந. கோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கோல்டு பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் குன்னம் பா.ராமமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஒன்றியகுழு உறுப்பினா் ப.பரமசிவன், ஒன்றிய துணை செயலாளா் குமாா், ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுதாகா், நகா்மன்ற உறுப்பினா்கள் நா்மதா மோகனகிருஷ்ணன், லில்லி மாணிக்கம், நிா்மலா மகேஷ், வீரபத்திரன், இந்துமதி நவீன்குமாா், நகர துணை செயலாளா் ஆறுமுகம், முன்னாள் இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக் கலந்து கொண்டனா்.