What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
தியாகராஜ சுவாமி கோயில் நடை அடைப்பு
திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் நடை வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். இதனிடையே, தெற்கு மட விளாகத்தில் துக்க நிகழ்வு நடைபெற்றதால், கோயில் நடை வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை நடை அடைக்கப்படுவதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருக்காா்த்திகையையொட்டி நடைபெறும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு உள்ளிட்டவை சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளன.