செய்திகள் :

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

post image

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

ஆங்கிலேயா்களால் சிறைபிடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டாா். அவரது நினைவு தினத்தையொட்டி, மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும், ஈரோடு- பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திலும் அரசு சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி, சங்ககிரி நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழிமுருகன், சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பி.தங்கமுத்து, திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.தேவூரை அடுத்த புள்ளாகவுண... மேலும் பார்க்க

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.சேலம் காவேரி... மேலும் பார்க்க