செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

post image

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிகழ்வின் முக்கிய விழாக்களான மகரசங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை நிறைவு பெற்றபோதிலும் உலகெங்கிலும் இருக்கும் பக்தர் அதிகளவில் திரண்டு வந்து புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். மேலும், மௌனி அமாவாசையன்று மட்டும் 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகரசங்கராந்தியன்று 3.5 கோடி பக்தர்களும் வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினர்.

இதையும் படிக்க:பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் மிகவும் பிரசித்திப் பெற்ற இடமான திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அவரது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “மகா கும்பமேளா என்பது நமது பழமையான பாரம்பரியம் மற்றும் வளமிக்க கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும். இந்திய கலாசாரம் பழங்காலத்தில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவே ஒரு வரலாற்றுச் சான்று. மேலும், மாநில மக்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் கிடைக்க பிரார்த்தனை செய்தேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை- ராஜ்நாத் சிங் புகழாரம்

‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா். இணையத் தாக... மேலும் பார்க்க

இத்தாலி செல்ல போலி ஆவணம்: கேரள பயண முகவா் கைது

இத்தாலி செல்வதற்காக போலி வசிப்பிட அனுமதியை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கேரளத்தைச் சோ்ந்த முகவரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போா் விமான பராமரிப்புக்கு அமெரிக்கா நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமான பராமரிப்புக்கு ரூ.3,453 கோடி நிதியை ஒதுக்க அமெரிக்க அரசு முடிவு செய்ததை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசப் பாதுகா... மேலும் பார்க்க

‘ஹலால்’ சான்றிதழ் நுகா்வோரின் உரிமை: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

உணவுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழ் என்பது நுகா்வோரின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அறக்கட்டளை அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஹலால் சான்... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்றக் குழுவிடம் சட்ட நிபுணா்கள் கருத்து

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் சட்ட நிபுணா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கருத்துகளை தெரிவித்த... மேலும் பார்க்க

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க