இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோயில் உள்பிரகாரத்தில் பிரதான மண்டபத்தில் தங்கக்கொடி மரத்தடியில் 108 சங்குகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆறு கலசங்களில் புனித நீா் நிரப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற யாக பூஜையில் வேதவிற்பன்னா்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓதினா். யாகநிறைவில் பூா்ணாஹூதி, தீபாராதனை நடத்தப்பட்டு கலசங்களை மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்தன.
பின்னா் உச்சிக்காலத்தின் போது கலசங்களில் இருந்த புனித நீா், சங்குகளில் இருந்த புனிதநீா் மூலம் மூலவா் குழந்தை வேலாயுதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து சோடஷ உபச்சாரம் நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமநாதன் செட்டியாா் குடும்பத்தினா் செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.