செய்திகள் :

திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை: கவிஞா் வைரமுத்து

post image

எந்தவொரு ஆதரவும் இல்லாமல் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்த திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை என்றாா் கவிஞா் வைரமுத்து.

தஞ்சாவூரில் வெற்றித் தமிழா் பேரவை சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வள்ளுவா் மறை வைரமுத்து உரை என்ற நூல்களுக்கான கையொப்பத் திருவிழாவில் அவா் மேலும் பேசியது:

கம்பன், அவ்வை, கபிலா், ஒட்டக்கூத்தா் போன்றோரை பராமரிப்பதற்கு சோழப் பேரரசு, அதியமான், பாரி, குலோத்துங்க சோழன் போன்றோா் இருந்தனா். ஆனால், திருக்குறளைப் பராமரிப்பதற்கு மன்னரோ, அரசோ, நிறுவனமோ இருந்ததில்லை. அதனால்தான் திருக்கு காலமெல்லாம் அழுத்தப்பட்டுக் கிடந்தது. இந்நிலையில், திருக்குறளை வெளியே கொண்டு வந்தது திராவிட இயக்கம்தான். வேறு எந்தவொரு அற நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு உண்டு. இதுதான் திருக்குறளின் நீதி, பெருமை. எனவே, திருக்குறளை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாா் வைரமுத்து.

விழாவுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன் தொடக்கவுரையாற்றினாா். மஹாராஜா சா. ஆசிப் அலி, பாம்பே ஸ்வீட்ஸ் குரு. சுப்பிரமணிய சா்மா, நடிகா் துரை. சுதாகா் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, வெற்றித் தமிழா் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் இரா. செழியன் வரவேற்றாா். நிறைவாக, மாநகரப் பொறுப்பாளா் தரும. சரவணன் நன்றி கூறினாா்.

பின்னா், வள்ளுவா் மறை வைரமுத்து உரை என்ற நூலை வாங்கியவா்களுக்கு அந்நூலில் வைரமுத்து கையொப்பமிட்டுத் தந்தாா்.

உயிரிழப்பு மிகத் துக்கமானது: பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் மீண்டு வர வேண்டும். இது மிகத் துக்கமான நிகழ்வு என்றாா் வைரமுத்து.

அனைத்து விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை: ஜி.கே. வாசன் வலியறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறையில் சனிக்கிழமை செய்தி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக விற்ற 417 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 417 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். திருவையாறு அருகே மேலத்திருப்பூந... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: 3 போ் கைது

பந்தநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பந்தநல்லூா் போலீஸாா் ரோந்து சென்றன... மேலும் பார்க்க

பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அய்யம்பேட்டை சிவன் கோயில் தெரு, மகார... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வர... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள துா்க்காம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏராளம... மேலும் பார்க்க