செய்திகள் :

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

post image

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, ரயில் நிறுத்தி வைத்து இயக்கம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டிஎண் 66019), செப்டம்பர் 6 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பர் 8-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 65 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து:

குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி -காட்பாடி இடையேயான பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் -திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டிஎண் 16854), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் காட்பாடி -திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16853), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Changes in train service due to engineering work in Trichy division

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. ... மேலும் பார்க்க

ஜொ்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு: முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

ஜொ்மனியில் தமிழ்நாடு அரசின் சாா்பில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் மேலும் ரூ.3,819 கோடிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை... மேலும் பார்க்க

செப்.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் (செப். 3) முதல் செப். 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது: நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கான வருவாய் வரவினங்களில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். அரசின் தொலைநோக்குத் திட்டங்க... மேலும் பார்க்க