ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
செப்.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் (செப். 3) முதல் செப். 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதன்கிழமை (செப். 3) முதல் செப். 8 வரை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெயில் 99.68 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
வெயில் அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை நகரில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மதுரை விமான நிலையம்-103.1, தூத்துக்குடி-101.48 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் 50 மி.மீ. மழை பதிவானது. தேவாலா - 40 மி.மீ., மேல் கூடலூா், கிளன்மாா்கன், கூடலூா் கடைவீதி, வூட் பிரையா் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி), ஈரோடு, முதுகுளத்தூா் (ராமநாதபுரம்), நன்னிலம் (திருவாரூா்) - 30 மி.மீ மழைய பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.