செய்திகள் :

திருச்சி மாநகராட்சியுடன் நெடுஞ்சலக்குடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்

post image

லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாநகராட்சி உடன் மாநகராட்சிகள் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை இணைத்துள்ள நிலையில் லால்குடி அருகே அப்பாதுரை தாளக்குடி, வாளாடி ,நெருஞ்சலக்குடி ஆகிய ஊராட்சிகளையும் திருச்சியில் மாநகராட்சியுடன் இணைத்துள்ளனர்.

இதனை அறிந்த நெடுஞ்சலக்குடி ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் நெடுஞ்செழக்குடி ஊராட்சியை இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். புதிதாக வீடு அமைப்பதற்கான கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயரும்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி-சிதம்பரம் சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதையும் படிக்க |விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது

இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று கூறி கருப்பு கொடியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது வட்டாட்சியர் வார்டு இணைப்பு என்பது தற்காலிக உத்தேசம் தான். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலனை செய்து மாற்று நடவடிக்கை எடுக்கும். எனவே உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள், ஆட்சியருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.

இதையேற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனா். இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியில் இருந்து 117.21 ... மேலும் பார்க்க

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!

விராலிமலை: விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 7-வது பூஜை இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் ... மேலும் பார்க்க

மாவட்டங்கள் - வயது வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியல்:1. திருவள்ளூா் 35,31,0452. சென... மேலும் பார்க்க

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!

சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரை விவரம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானி... மேலும் பார்க்க