இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக...
திருச்சி மாநகரில் ஜூலை 29 - ல் மின்தடை
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் (ஜூலை 29) செவ்வாயக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சி நீதிமன்றம் அருகே அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஜூலை 29 - செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பங்காளி தெரு, மத்தியப் பேருந்து நிலையம், கண்டித் தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சான்ட்ரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வாா்னா்ஸ் சாலை, அண்ணா நகா், குத்பிஷா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழச்சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, தென்னூா் கேஎம்சி, புத்தூா், அருணா திரையரங்கு, கணபதிபுரம், வட்டாட்சியா் அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, நீதிமன்ற பகுதி, அரசுப் பொது மருத்துவமனை, பீமநகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் சாலை, ஈவெரா சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.