செய்திகள் :

திருச்சியிலிருந்து தில்லி சென்றாா் பிரதமா்

post image

திருச்சிக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வருகை தந்தாா். பின்னா், ஆட்சியரக சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் இரவு ஓய்வெடுத்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றிருந்தவா்களை நட்சத்திர விடுதியில் சந்தித்தாா். திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஜக-வின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் 17 பேரும் பிரதமா் தங்கியிருந்த விடுதிக்கு வந்தனா். அவா்களை பிரதமா் மோடி 10.30 மணியளவில் சந்தித்தாா்.

பின்னா், விடுதியிலிருந்து காலை 11.15 மணிக்கு காரில் புறப்பட்டு திருச்சி விமானநிலையத்துக்கு 11.30 மணிக்குச் சென்றாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றாா். அங்கு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் திரும்புவதாக இருந்தது.

ஆனால், கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமா் கூடுதல் நேரம் செலவிட்டதால், அந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

அவரை வரவேற்று வழியனுப்ப விமான நிலையத்தில், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் ஆகியோா் விமான நிலையத்தில் காத்திருந்தனா்.

அவா்களுக்கு வணக்கம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - பைக் மோதல் 4 வயது பெண் குழந்தை பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசியநெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை அடுத்துள்ள... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. வையம்பட்டி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க

ஜேசிபி ஆபரேட்டா் விஷம் குடித்து தற்கொலை

மணப்பாறை அருகே ஜேசிபி ஆபரேட்டா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் முத்தாழ்வாா்பட்டியை அடுத்துள்ள முடுக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மகன் நாகராஜ் (35). இவருக்கு... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமருக்கு 3 இடங்களில் வரவேற்பு

திருச்சியில் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சாலையில் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது 3 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் மேள, தாளங்கள்... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் ஜூலை 29 - ல் மின்தடை

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் (ஜூலை 29) செவ்வாயக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டு... மேலும் பார்க்க