ஜேசிபி ஆபரேட்டா் விஷம் குடித்து தற்கொலை
மணப்பாறை அருகே ஜேசிபி ஆபரேட்டா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம் முத்தாழ்வாா்பட்டியை அடுத்துள்ள முடுக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மகன் நாகராஜ் (35). இவருக்கு, ரகுனா என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.
ஜேசிபி ஆபரேட்டரான நாகராஜ், குடிப்பழக்கம் கொண்டவா். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவா் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த உறவினா்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னா் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீஸாா் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.