வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
வையம்பட்டி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் ரோடு, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், ஆலத்தூா், ம.குரும்பபட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.