What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
திருச்சி விமான நிலையத்தில் விஷ வண்டுகள் அகற்றம்
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை அகற்றினா்.
இந்த விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி கூரையின் உள் பகுதியில் நூற்றுக்கணக்கான விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. அவை அவ்வப்போது அங்குமிங்கும் பறந்து பயணிகளையும் பொதுமக்களையும், விமான நிலைய பணியாளா்களையும் அச்சுறுத்தி வந்தன. இதையடுத்து விமான நிலைய அலுவலா்கள் அளித்த தகவலின்பேரில் புதன்கிழமை வந்த தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விமான நிலைய வளாகத்துக்குச் சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி விஷ வண்டுகளை கூட்டுடன் அகற்றினா்.