``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது ...
திருச்செங்கோடு: ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு!
திருச்செங்கோடு அருகே ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை பசு ஈன்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம், காசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி - உண்ணாமலை தம்பதியினர்.
இவர்கள் தங்கள் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில், சினையுற்றிருந்த ஒரு கலப்பின பசு புதன்கிழமை இரவு இரு கன்றுகளை ஈன்றது.
வழக்கமாக நாட்டுப் பசு, கலப்பின பசு வகையினங்கள் ஒரு கன்று மட்டுமே ஈனும். ஆனால் ஒரே நேரத்தில் இரு கன்றுகளை ஈன்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உண்ணாமலை கூறுகையில், நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், இப்போதுதான் ஒரே நேரத்தில் இரு கன்றுகள் ஈன்றிருப்பதைப் பார்க்கிறேன். காளைக் கன்றும், பெண் கன்றும் நலமாக இருக்கின்றன என்றார்.