பெண்ணை தாக்கிய விவசாயி கைது!
பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.
மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. அண்மையில் இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சித்ராவை கோபால் தாக்கினாா்.
இதில் காயமடைந்த சித்ரா திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டாா். புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபாலை கைது செய்தனா். பின்னா், அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளை சிறையில் அடைத்தனா்.