நாமக்கல் ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா பிப்.5 நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்வும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணியளவில் 108 வலம்புரி சங்காபிஷேகம், வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சா் செ.காந்திசெல்வன், நாமக்கல் மாநகராட்சி துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.