கெட்டிமேடு இன்றைய மின்தடை!
கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (பிப். 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாயக்கனூா், பெருமாப்பட்டி, தூசூா், கொடிக்கால்புதூா், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.